Saturday, 29 December 2012

வாருங்கள் வரலாறு படைப்போம் .....!





மலையும் மலை சார்ந்த நிலம் -   குறிஞ்சி.
காடும் காடு சார்ந்த நிலம் - முல்லை .
வயலும் வயல் சார்ந்த நிலம் - மருதம்.
கடலும் கடல் சார்ந்த பகுதிகள் - நெய்தல்.
முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் - பாலை .

இது அத்தனையும் ஒன்று சேர்ந்த  நிலம் - பூவை (எ )  பூலாங்குறிச்சி.

பூலாங்குறிச்சி - தென் தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள ஓர் அழகான பாரதிராஜா பட  கிராமம் .


ஏன் இந்த தளம் ...?

பூலாங்குறிச்சி  யின்  வரலாற்றை வரும் தலைமுறையினருக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதற்கான ஒரு சிறிய முயற்சி இது. மலை , வயல், கோவில் , ஊருணி , மருத்துவமனை , பள்ளி , கல்லூரி என சகலமும் உள்ள நம்ம மண்ணை பற்றியும் , வீரத்திற்கும், ஈரத்திற்கும் , உழைப்புக்கும் , நேர்மைக்கும் , வணிகத்திற்கும் பெயர் பெற்ற நம் மண்ணின் மைந்தர்களைப் பற்றியும் ஒரு வரலாற்று பதிவு தான் இந்த தளம் .



வாருங்கள் வரலாறு படைப்போம் .....! ஏன்னா இது நம்ம ஊருப்பா ...!









என்றென்றும் புன்னகையுடன் J


ஜீவன்சுப்பு .



12 comments:

  1. ஆமாங்க மிக நல்ல முயற்சி. எந்த ஊரு போனாலும் நம்ம ஊருபோல வருமா? படங்களும் இணைக்கலாமா சார்?

    ReplyDelete
  2. ஆர்டர் இதுதான்...குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல், பாலை

    கடலும் கடல் சார்ந்த பகுதிகள் நெய்தல்.

    பாராட்டுகள்.. ஜீவன் சுப்பு

    ReplyDelete
    Replies
    1. ** குறிஞ்சி யும் முல்லையும் திரிந்தது பாலை அதுனால ( தொடர்ச்சிக்காக ) மூணாவதா பாலைய போட்டேன் . நீரும் வயலும் அதிக தொடர்புங்கிறதுனால பின்ன போட்டேன் . பெரிய தவறு ன்னா சொல்லுங்க மாத்திரலாம் ...அப்றம் எங்க ஊர்ல கடல் இல்லங்க அதான் நீர்னு மாத்திட்டேன் ...**

      //தவறேதும் இல்லை இந்த ஆர்டர் எதுக்கு சொல்றதுன்னா.. நிலத்தின் வகைப்பாட்டியல் எப்பவுமே ஞாபகம் வைத்துக் கொள்வதற்குதான்.

      நீரும் நீர்சார்ந்த பகுதிகள் என்பது குறுகிய வட்டம் அதனால கடலும் கடல் சார்ந்த பகுதிகள்னு சொல்றோம். இதுல நதிகளும் அடக்கம் தான்.

      வருங்கால சந்ததியினருக்கு நாம தவாறான தகவல்களை பதிவு செய்யகூடாது ...இல்லையா ? என் தமிழ் ஆசிரியர்களின் பாடம் அப்படி !//

      இதை குறிப்பிடவே.. மற்றபடி தவறு கிடையாது.

      ”பூலாங்குறிச்சி” பற்றிய தகவல்களை ஆர்வமுடன் எதிர் பார்க்கிறோம், தொடருங்கள்.
      நன்றி ஜீவன்சுப்பு

      ** ரெம்ப நன்றி . மாத்திட்டேங்க ..**

      Delete
  3. வரலாறு படைக்க வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. நல்ல முயற்சி, வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. u know இங்க உங்க writing styleலே மாறிடுச்சு !!!!!!!வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. அருமை அருமை நமது ஊர் பெருமை உலகறிய வைப்பதில் உங்கள் பங்கு மிகவும் அருமை ....

    ReplyDelete
  7. அருமை அருமை நமது ஊர் பெருமை உலகறிய வைப்பதில் உங்கள் பங்கு மிகவும் அருமை .... - Murugappan Poolankurichi's Seed

    ReplyDelete
  8. பெரம்பலூரில் பூலாம்பாடி என்கிற பேரூராட்சி (ஆனால் கிராமம்) உண்டு.. செழிப்பான,.. விவசாயம் சார்ந்த.., ஏரிகள் நிறைந்த... அழகான ஊர்.. சின்னக் கெண்டி என்று சொல்வார்களாம் முற்காலங்களில்..(யார் போனாலும் பிழைக்க வழி கிடைக்கும் என்கிற அர்த்தத்தில்)

    ReplyDelete

வரலாற்றை செம்மைப்படுத்துங்கள் .